தற்ப்போது ஜெயாமேக்ஸ் டிவியில் முக்கால்வாசி நேரம் நடிகர் விஜய்பாட்டுதான் ஓடுகிறது. அதுவும் புதிய அரசு பதவியேற்றப்பிறகுதான் அப்படி. காரணம் ஏன் என்றால் தேர்தலுக்கு முன்பு விஜய் தனது மக்கள் நற்ப்பனிமன்றத்தின் ஆதரவையும், தன்னோட ஆதரவையும் அஇஅதிமுகவுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
அப்படின்னா என்னனு மட்டும் கேட்டுடாதீங்கன்னு பொதுமக்கள் நம் காதுபடவே பேசியதை நாம் கேட்க நேர்ந்தது. அவர் நேரமோ, இல்லை அதிமுகவின் வலுவான கூட்டணியோ ஜெ! ஜெயித்துவிட்டார். இருந்தாலும் சிறு துறும்பும் பல் குத்த உதவிய கணக்காக ஜெ தரப்பு இதை எடுத்துக்கொண்டது.
அதற்க்காக விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் ஜெயாமேக்சில் அவர் படபாடல்களை ஒளிபரப்பி வருவதாக விஜய் ரசிகர் ஒருவர் நம்மிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
எனக்கு ஒன்னுமே விளங்களியே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக